நாளை கனமழை!! ஜனவரி  9ந் தேதி வரை மழை நீடிக்கும்!

  சாரா   | Last Modified : 01 Jan, 2020 02:10 pm
rain-will-continue-till-jan9th

வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிந்துவிடும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரி முதல் வாரம் வரை பருவமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், கடல் காற்றின் திசை, வேகம் மாறி உள்ளதால் பருவமழை மேலும் ஒரு வாரம் நீடித்துள்ளதாகவும் இதன் காரணமாக கூடுதல் மழை கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றார்.

தமிழகத்தில் 15 சதவீதம் அளவுக்கு வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, விருதுநகர் மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. சென்னை, வேலூர், மதுரை, பெரம்பலூர் மாவட்டங்களில் இயல்பைவிட குறைந்த அளவு மழை பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 480 மி.மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 830 மி.மீட்டர் மழை கிடைத்துள்ளது. இது 85 சதவீதம் அதிகம். சென்னை, வேலூர், மதுரை, பெரம்பலூர் மாவட்டங்களில் இயல்பைவிட குறைந்த அளவு மழை பெய்துள்ளது.

சென்னையில் இந்த கால கட்டத்தில் 705 மி.மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 630 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இது 14 சதவீதம் குறைவு. ஆனாலும் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது தமிழகத்தில் 15 சதவீதம் அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close