அமலுக்கு வந்த பயணிகள் ரயில் கட்டண உயர்வு...

  சாரா   | Last Modified : 01 Jan, 2020 11:11 pm
train-tickets-to-cost-more

புத்தாண்டான இன்று முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முதல் ஏசி ரயில் பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு கூடுதலாக 4 பைசா கட்டணமும், சாதாரண ஏசி அல்லாத ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசாவும், எக்ஸ்பிரஸ் ஏசி அல்லாத ரயில்களுக்கு 2 பைசா கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சதாப்தி,  துரந்தோ உள்ளிட்ட பிரீமியம் ரயில்களுக்கும்  இந்தக் கட்டண உயர்வு பொருந்தும்.புறநகர் ரயில் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

                                                                      

முன்பதிவு கட்டணம், சூப்பர்ஃபாஸ்ட் கூடுதல் கட்டணம் போன்றவற்றுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close