குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள்! டிராய் உத்தரவால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

  சாரா   | Last Modified : 02 Jan, 2020 10:36 am
trai-s-new-announcement

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான கட்டணங்களை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வசூலித்து வருகிறார்கள். டிராய் வெளியிட்ட கட்டணத்திற்கும் அவர்கள் வசூலித்து வரும் கட்டணங்களுக்கும் சம்மந்தமே இல்லாத அளவிற்கு வித்தியாசத்துடன் இருந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்கும் சேனல்களுக்கு அவர்களாகவே ஒரு கட்டணத்தை நிர்ணயித்து, வேண்டாத சேனல்களுக்கு குறைந்த கட்டணத்தைச் சொல்லும் போக்கும் இருந்து வருகிறது. 

இந்நிலையில், கேபிள் இணைப்புகள் மூலம், குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை பார்க்கும் வகையில் புதியதாக விதிமுறைகளை திருத்தி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி அதிகபட்சமாக ரூ.160க்குள் மாதந்தோறும் சேனல்களை வழங்க வேண்டும். அதற்கு மேல் வசூலிக்கக்கூடாது என்று அறிவித்துள்ளது. 

ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் கூடுதல் இணைப்புகளுக்கு அதிகபட்சமாக 40 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதைப் போலவே நெட்வொர்க் திறன் கட்டணமாக 200 சேனல்களுக்கு ரூ.130 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய தகவல், ஒளிபரப்புத்துறையால் கட்டாய சேனலாக அறிவிக்கப்பட்டுள்ள சேனல்கள் இந்த பட்டியலில் அடங்காது. மேலும், 6 மாதங்களுக்கு மேலான சந்தாதாரர்களுக்கு தள்ளுபடி வழங்குவதற்கு ஆபரேட்டர்களுக்கு டிராய் அனுமதி அளித்து உள்ளது. இவ்வாறு விதிமுறைகளை திருத்தி வெளியிட்டுள்ள டிராய், இந்த விதிமுறைகள் அனைத்தும் மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close