வெடித்து சிதறிய தொழிற்சாலை! மீட்பு படையினரும் சிக்கிக் கொண்ட பரிதாபம்!!

  சாரா   | Last Modified : 02 Jan, 2020 11:48 am
fire-in-delhi

டெல்லியில் இன்று அதிகாலை 4.26 மணியளவில் அங்கிருந்த பேட்டரி தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அதிகாலை நேரம் என்பதால், விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் வேகமாக ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்டது பேட்டரி தொழிற்சாலை என்பதால், வேகமாக பரவிக் கொண்டிருந்த தீயை அணைப்பதற்காக பல வீரர்கள் தொழிற்சாலையின் உட்பகுதியில் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக பரவிக் கொண்டிருந்த தீயினால், தொழிற்சாலையில் இருந்த பேட்டரிகள் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களும் சிக்கிக் கொண்டனர்.

மேலும் வெடி விபத்து ஏற்பட்டதால் தொழிற்சாலைக் கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் உள்பட பலர் சிக்கியுள்ளனர்.மீட்பு பணியில் 35 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

— Arvind Kejriwal (@ArvindKejriwal) 2 January 2020

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில், தீ விபத்தில் சிக்கிக் கொண்ட வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்படவேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளார்.

அதிகாலையில் நேர்ந்த இந்த தீ விபத்தினால் டெல்லி மாநகர் முழுவதுமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close