ரயிலில் பெட்டி பெட்டியாக கடத்தி கொண்டு வரப்பட்ட மது பாட்டில்கள்...

  முத்து   | Last Modified : 02 Jan, 2020 12:06 pm
brindavan-express-in-wine

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெங்களூரில் இருந்து சென்னை  சென்ட்ரலுக்கு வந்த பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த ரயிலின் பொதுப்பெட்டியில் சந்தேகத்துக்கிடமாக டிராவல் பேக்குகள் இருந்தது. அதை போலீசார் சோதனையிட்டனர். அதில் 500 கிலோ எடையுள்ள பிராந்தி, விஸ்கி பவுச்சுகள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், மதுவை கடத்தி வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சரவணன், திருப்பத்தூரை சேர்ந்த பசுபதி ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close