நள்ளிரவு 2 மணி வரை மதுபான கடைகள் திறக்க முடிவு! அதிர்ச்சியளித்த மந்திரி!!

  சாரா   | Last Modified : 02 Jan, 2020 12:47 pm
liquor-shops-tobe-open-till-midnight-2am

கடும் பொருளாதார சரிவை இந்தியா சந்தித்து வருவதாக நிபுணர்கள் ஒரு பக்கம் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மக்களின் சராசரி வருவாய் வெகுவாக குறைந்திருப்பதாக கருத்துக் கணிப்புகள் அதிர்ச்சியைத் தருகின்றன. இந்நிலையில், ஏழைகளுக்கு மானிய விலையில் மது வழங்குவதற்கு  ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், பெங்களூருவில் நள்ளிரவு 2 மணி வரை மதுபான கடைகளை திறந்து வைத்திருப்பதற்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கலால்துறை மந்திரி எச்.நாகேஷ் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், கர்நாடகத்தில் சித்தராமையா முதல்வராக இருந்த போது வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் பெங்களூரு நகரில் மதுபான கடைகள் நள்ளிரவு 1 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டது என்றும், அரசின் வருமானத்தை பெருக்கும் வகையில் பெங்களூரு நகரில் தினமும் நள்ளிரவு 2 மணி வரை மதுபான கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்த திட்டத்திற்கு போலீஸ் துறையும் அனுமதி வழங்கியுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியை போலீசார் மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், ஏழை மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மதுபானத்தை மட்டும் மானிய விலையில் விற்பனை செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்று மந்திரி எச்.நாகேஷ் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close