காதலித்து குடும்பம் நடத்தி, உயிரோடு கொளுத்துவதாக மிரட்டும் போலீஸ்காரர்! இளம்பெண் போராட்டம்!

  அனிதா   | Last Modified : 04 Jan, 2020 02:32 pm
police-threatening-lover

போலீஸ்காரர் என்னை மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கான்ஸ்டபிள் வீரமணி மீது அவரது காதலி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை சேர்ந்தவர் சரஸ்வதி (24). இவர் பியூட்டிஷனாக பணியாற்றி வருகிறார். இவரை கான்ஸ்டபிள் வீரமணி காதலித்து வந்த நிலையில், காதலை சரஸ்வதியிடம் கூறி கல்யாணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். முதலில் மவுனம் காத்த சரஸ்வதி தொடர்ந்து திருமணம் செய்துகொள்வதாக கூறியதால், அவரது காதலை ஏற்றுக்கொண்டு அவரும் காதலித்துள்ளார். இதனிடையே மே மாதம் 27ஆம் தேதி வீரமணி சரஸ்வதியிடம் நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், இருவரும் எல்லை மீறி நடந்துள்ளனர். 

ஆனால், இச்சம்பவத்திற்கு பிறகு வீரமணியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த சரஸ்வதி திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து கூறிவந்துள்ளார். இதையடுத்து, வீரமணி குடும்பத்தினர் பெண் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.  அப்போது, வீடு சிறியதாக உள்ளது என்றும், என் மகன் சப்-இன்ஸ்பெக்டருக்கு படிக்க போவதால் வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்கவுள்ளதாகவும் வீரமணியின் தந்தை (ரிடையர் போலீஸ்) கூறியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி இது குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், "இப்படி புகார் பண்ணினால், ரோட்டிலேயே வெச்சு பெட்ரோல் ஊற்றி உன்னை கொளுத்திடுவேன்"னு மிரட்டுவதாக சரஸ்வதி கூறியுள்ளார். 

இதனிடையே, "நான் சரஸ்வதியை கல்யாணம் செய்ய தயாராக இருப்பதாகவும், எங்க வீட்டுக்கு வந்து முறைப்படி பேசணும்னு சொல்லியும் வரவில்லை. யாருடைய தூண்டுதலின் பேரிலோ தவறுக்கு மேல் தவறு செய்துவருகிறார்" என காதலன் வீரமணி தெரிவித்துள்ளார். இந்நிலையில், யார் மீது தவறு உள்ளது என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close