79 வயதில் தேர்தலில் ஜெயிச்ச வீரம்மாள்! ஊராட்சி மன்றத் தலைவராக சான்றிதழ் பெற்றார்!

  சாரா   | Last Modified : 02 Jan, 2020 05:38 pm
tn-election-results-2019-20

தமிழகத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், மதுரை மாவட்டத்திற்குட்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 79 வயது மூதாட்டி வீரம்மாள் போட்டியிட்டார். 

இந்நிலையில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், வீரம்மாள் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை காட்டிலும் 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அதிகாரி சான்றிதழை வழங்கியுள்ளார். இந்த பதவிக்கு வீரம்மாள் ஏற்கெனவே இரு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் விடாமுயற்சியுடன் போராடி 3ஆவது முறையாக போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close