அதிமுகவை வீழ்த்தினார் கணவர்! பாஜகவிடம் தோற்றார் மனைவி! தேர்தல் சுவாரஸ்யம்!

  சாரா   | Last Modified : 02 Jan, 2020 06:46 pm
tn-election-results-2019-20

நான்காவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட கணவர், அதிமுக எம்.எல்.ஏவின் கணவரை வீழ்த்திய நிலையில், மனைவி பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடந்த உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
இதில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தின் முதலாவது வார்டு மற்றும் நான்காவது வார்டுகளில் கணவனும், மனைவியும் திமுக சார்பில் போட்டியிட்டனர்.

முதலாவது வார்டில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் குமார் 1859 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளரான கீதா ஸ்ரீதரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். கீதா ஸ்ரீதர் 1727 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

அதே சமயம் தோல்வியடைந்த கீதா ஸ்ரீதரின், கணவர் ஸ்ரீதர் நான்காவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதுவும், அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகனை எதிர்த்துப் போட்டியிட்டு 1307 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close