ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிச்ச வேட்பாளர்! கண்ணீர் விட்டு அழுத போட்டி வேட்பாளர்!

  சாரா   | Last Modified : 02 Jan, 2020 07:29 pm
tn-election-results-2019-20

தமிழகத்தில் கடந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதி நடைப்பெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்ற நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில், அதிமுக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் சுந்தரி, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இன்று தேர்தல் முடிவுகள் வெளியான கொண்டிருக்கும் நிலையில், அதிமுக வேட்பாளர் சுந்தரி பெற்ற ஓட்டுக்கள் 1152. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணி செல்வி 1151 வாக்குகள் பெற்றார். எனவே, ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சுந்தரி வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதும், மிகுந்த சோகத்துடன் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாலர் மணி செல்வி, கண் கலங்க வாக்குகள் எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினார்.

newstm.in
 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close