மாமியாருக்கும், மருமகளுக்கும் ஒரே கள்ளக்காதலன்..

  அனிதா   | Last Modified : 02 Jan, 2020 10:00 pm
illegal-relation

குஜராத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒரே கள்ளக்காதலன் இருந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இவரது 23 வயதுடைய மனைவி அவரது தாயார் ஆகியோருடன் அந்த இளைஞர் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு குடும்ப நண்பர் ஒருவர் அடிக்கடி வருகை தந்துள்ளார். அவருக்கும் அந்த இளம் பெண்ணின் மாமியாருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, மாமியார் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்த அந்த நபர் இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி மயக்கியதில், அந்த பெண்ணுக்கும் அவருக்கும் இடையே காதல் எற்பட்டுள்ளது. மாமியார், மருமகள் ஆகிய இருவருடனும் மாறி மாறி கள்ளகாதல் செய்து வந்த அந்த மர்ம நபர் ஒரு நாள் பிடிபட்டதை அடுத்து இந்த விஷயம் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த குடும்பத்தினர் அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close