ஊராட்சி மன்றத் தலைவரான 22 வயது மாணவி..

  அனிதா   | Last Modified : 02 Jan, 2020 08:38 pm
the-22-year-old-student-win-of-the-chairman-of-the-panchayat-board

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் என 91,975 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

இதில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 22 வயதான பிபிஏ பட்டதாரி ஆர்.சுபிதா வெற்றி பெற்றுள்ளார். 

ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூளகிரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காட்டிநாயக்கன்தொட்டியில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21வயது மாணவி சந்தியா வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. மாணவிகள் வெற்றி பெற்றிருப்பது அரசியலில் புது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close