குடிபோதையில் வாக்கு எண்ணும் பணிக்கு வந்த ஆசிரியர்..!

  அனிதா   | Last Modified : 02 Jan, 2020 09:12 pm
a-teacher-come-drunken-in-vote-counting-work

தமிழகத்தில் நடந்து முடிந்து ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள திருவாடுதுறை ஆதினம் மேல்நிலையப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் பணியில், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த தென்றல்குமார் (48) என்ற அரசு பள்ளி ஆசிரியரும் இப்பணியில் இருந்தார். 

ஆனால் அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சக பணியாளர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரை விசாரித்த போது, அவர் குடித்துவிட்டு வந்ததுடன், மது பாட்டில்களையும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவருக்கான தேர்தல் பணி ஆணை ரத்து செய்யப்பட்டது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close