அரசு மருத்துவமனையில் பிரபல நடிகை! லட்சங்களில் சம்பாதித்தும் வறுமையில் வாடும் கொடூரம்!

  அனிதா   | Last Modified : 03 Jan, 2020 05:17 pm
popular-actress-in-government-hospital

மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் நடிகை ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷர்மிளா. நல்லதொரு குடும்பம், உன்னை கண் தேடுதே உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்து பிரபலமானார். ஆனால், பிறகு பட வாய்ப்புகள் குறைந்ததால் பண சிக்கலில் வாழ்ந்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்த்தோ பிரச்சனை ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு செல்ல பணம் இல்லாததால், இவர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவரை அட்மிட் ஆகும்படி கூறியுள்ளனர். முதலில் யோசித்த ஷர்மிளா பின்னர் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றுள்ளார். அங்கிருந்த போது, அவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். ஆனால் அவரை பார்த்த சிலர் இவர் நடிகை என்பதை கண்டுபிடித்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து போது அவரை பார்ப்பதற்கு கூட யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இந்த தகவல் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகை ஷர்மிளா திருமணமாகி விவாகரத்தான நிலையில், மீண்டும் திருமணம் செய்துள்ளார். அதிலும் கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது, குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்தக்கூட முடியாமல் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சங்கம் சார்பில் விஷால் அவருக்கு உதவி புரிந்து வருவதும் தெரியவந்துள்ளது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close