இன்று முதல் இலவச வைஃபை! மெட்ரோ ரயில்களில் நவீன வசதி!!

  அனிதா   | Last Modified : 03 Jan, 2020 04:06 pm
high-speed-wifi-for-the-first-time-in-south-asia

டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணத்தின்போதே அதிவேக வைஃபை சேவை இன்று முதல் இலவசமாக வழங்கப்படுகிறது.

22.7 கிமீ தூரம் கொண்ட டெல்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ்லைன் மெட்ரோ வழித்தடத்தில் 6 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் அதிவேக வைஃபை சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ தலைவர் மன்கு சிங் இதனை தொடங்கி வைத்தார்.

ஏற்கெனவே ரயில் நிலைய பிளாட்ஃபார்ம்களில் வைஃபை சேவை வழங்கப்படுகிறது என்றாலும் இனி ரயில்கள் இயக்கத்தின் போதே பயணிகளால் வைஃபையை பயன்படுத்திக் கொள்ள முடியும். இது 2Mbps என்ற அதிவேகம் கொண்டதாகும்.

METROWIFI_FREE என்ற வைஃபை நெட்வொர்க்கில் லாக் இன் செய்து, தொலைபேசி எண்ணை பதிவு செய்தால் OTP எண் ஒன்று அனுப்பப்படும். அதனை பதிவு செய்து இலவச சேவை பயணத்தில் அனுபவித்துக்கொள்ளலாம். இந்த சேவை டெல்லி மெட்ரோவின் பிற வழித்தடங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது சுரங்க மெட்ரோ ரயில்களில் வைஃபை சேவை ரஷ்யா, தென் கொரியா, சீனாவில் மட்டுமே அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே முதல் நாடாக இந்தியாவில் டெல்லி மெட்ரோவில் இந்த சேவை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close