ஸ்வைப்பிங் மெஷின் இல்லையென்றால் ரூ.5000 அபராதம்! வெளியானது புது அறிவிப்பு!

  அனிதா   | Last Modified : 03 Jan, 2020 05:18 pm
there-is-no-mtr-payment-for-cash-transactions

ரூபே, பீம் யூபிஐ, கூகுள் பே, ஆதார்பே, என்.இ.எஃப்.டி, ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வியாபாரிகளிடம் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த எம்.டி.ஆர் கட்டணம் இனி வசூலிக்கப்பட மாட்டாது.

50 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டும் தொழில் நிறுவனங்கள் குறைந்த தொகைக்கான டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளைத் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். அப்படி வழங்கும் தொழில் நிறுவனங்களிடம் இருந்தும், வாடிக்கையாளர்களிடம் இருந்தும் எம்.டி.ஆர் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

இந்தப் புதிய உ‌த்தரவு புத்தாண்டு முதல் அமலுக்கு வந்திருக்கிறது. மத்திய அரசின் அறிவிப்பின்படி ரூ.50 கோடி அல்லது அதற்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதியை கட்டாயம் அளிக்க வேண்டும். அளிக்கத் தவறினால் நாளொன்றுக்கு 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close