கோயில்களை குறி வைத்து திருடும் கும்பல்.. காவல் துறை என்ன செய்கிறது என மக்கள் கேள்வி..?

  முத்து   | Last Modified : 03 Jan, 2020 07:52 am
theft-in-temples-in-chennai


சென்னை திருவொற்றியூர், கலைஞர் நகரில் பிரசித்தி பெற்ற பஞ்சமுக நாகத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அதேபோல், ராமசாமி நகரில் உள்ள வினைதீர்க்கும் விநாயகர் கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை பணத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த இரு சம்பவங்கள் குறித்து சாத்தாங்காடு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஒரே பகுதியில் இரண்டு கோயில்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு  கோயில்களில் திருடியது ஒரே கும்பல் தானா அல்லது தனிநபரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close