பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண்ணின் உடல் சாக்கடையில் வீசிய கொடூரம்..?

  முத்து   | Last Modified : 03 Jan, 2020 08:50 am
woman-body-require-in-roadside

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் கவிழ்ந்த நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், இவரை யாராவது அடித்து கொலை செய்து கால்வாயில் வீசினார்களா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேவேளையில், இறந்த பெண் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்பதால் வேலூருக்கு வந்து காணாமல் போன வடமாநில பெண்களின் பட்டியலை வைத்து அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அந்த பெண்ணின் சடலம் அரை நிர்வாணத்துடன் மீட்கப்பட்டுள்ளதால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டரா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close