அன்று பஞ்சாயத்தின் துப்புரவுத் தொழிலாளி.. இன்று பஞ்சாயத்து தலைவி.. அசத்தும் பாட்டி..

  முத்து   | Last Modified : 03 Jan, 2020 09:52 am
tamil-nadu-local-body-election-result

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் துப்புரவு பெண் தொழிலாளி  ஒருவர் தான் பணியாற்றி வந்த பஞ்சாயத்திற்கே தலைவரான நெகிழ்ச்சியான சம்பவம் உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழன் காலை முதல் எண்ணப்பட்டு அதற்கு மறுநாள் வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே துப்புரவுத் தொழிலாளி பெண் ஒருவர் தான் பணியாற்றிய பஞ்சாயத்திற்கே தலைவரான நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள்ள கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் சரஸ்வதி. ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சரஸ்வதி தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, கான்சாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். வியாழனன்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சரஸ்வதி தேர்தலில் வெற்றி பெற்று கான்சாபுரம் பஞ்சாயத்துக்குத் தலைவராகியுள்ளார். இந்நிலையில் தூய்மையான உண்மையான முறையில் செயல்பட்டு மக்களுக்கு நல்லது செய்வேன் என முதல்முறையாக பஞ்சாயத்து தலைவராக தேர்வாகியுள்ள சரஸ்வதி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close