உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியீடு.. அதிர்ச்சியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ திடீர் மரணம்..

  முத்து   | Last Modified : 03 Jan, 2020 12:25 pm
admk-mla-shakthivel-murugan-passed-way

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல் முருகன்  மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக  எம்எல்ஏ சக்திவேல் முருகன் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவர் கடந்த 2001 – 2006 ஆம் ஆண்டு காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். மதுரா கோட்ஸ் அதிமுக தொழிற்சங்க தலைவர் பொறுப்பையும் சக்திவேல் முருகன்  வகித்துள்ளார். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் அதிமுகவினர் அனைவரும் அதனை எதிர்பார்த்து கொண்டிருந்தனர். எனினும் அவர் இவர் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். இது அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close