வெங்காயம், பூண்டு அடுத்து புளி! ஒரே மாசத்துல ரெண்டு மடங்கு விலை!

  அனிதா   | Last Modified : 03 Jan, 2020 05:26 pm
onion-and-garlic-tamarind-price-hike

தமிழகத்தில் வெங்காயம், பூண்டு விலை உயர்வை தொடர்ந்து புளி விலையும் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வெங்காய விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதை தொடர்ந்து பூண்டு விளைச்சல் குறைந்ததால், பூண்டு விலையும் உயர்ந்தது. இந்நிலையில், தமிழகத்தில் புளி விளைச்சல் குறைவால் புளி விலையும் கடும் உயர்வை எட்டியுள்ளது. சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சாலையோரங்களில் இருந்த ஏராளமான புளியமரங்கள் வெட்டப்பட்டன. 

இது தவிர மழை குறைவு, நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் புளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், அருகில் உள்ள ஆந்திர, கேரள மாநிலங்களில் இருந்து புளி வரவைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த  ஒரு மாதத்துக்கு முன்பு வரை கொட்டை நீக்கிய புளி கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டது. தற்போது இதன் விலை இரு மடங்குக்கு மேல் உயர்ந்து கிலோ ரூ130க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது புளி சீசன் இல்லாத காரணத்தால் மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close