5வது முறையாக தமிழகத்துக்கு விருது! அதிக விளைச்சலுக்கான விருதை அமைச்சர் ஜெயக்குமார் பெற்றார்!

  சாரா   | Last Modified : 03 Jan, 2020 03:04 pm
tn-gets-award-for-the-5th-time

இந்தியாவிலேயே எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் அதிக விளைச்சலை பெற்ற தமிழகத்துக்கு சிறந்த வேளாண் தொழிலாளா் விருதை பிரதமா் நரேந்திர மோடி வழங்கினார்.

மத்திய வேளாண்மைத் துறை சார்பில் மாநில அரசுகளைக் கௌரவிப்பதற்காக, ஒவ்வொரு வருடமும் வேளாண் தொழிலாளா் விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற விழாவில், எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் அதிக விளைச்சலை அடைந்ததால் தமிழகத்துக்கு சிறந்த வேளாண் தொழிலாளா் விருதை பிரதமர் அளித்தார். தமிழக அரசின் சார்பில் பிரதமர் மோடியிடம் இருந்து இந்த விருதை அமைச்சர் டி.ஜெயக்குமார் பெற்றார். 

வேளாண் விளைபொருள் அதிக விளைச்சலுக்கான விருதை தமிழகம் பெறுவது இது 5வது முறை. கடந்த 2017- 18ம் ஆண்டில் ஹெக்டேருக்கு 2,729 கிலோ உற்பத்தி திறனுடன் 10.382 லட்சம் டன் எண்ணெய் வித்துகளை தமிழகம் உற்பத்தி செய்தது. 

2011-12ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வேளாண் விளைபொருள் விளைச்சலில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close