கட்டுக்காட்டாக பணம்.. பரிசு பொருட்களின் குவியல்! சிக்கிய அரசு அதிகாரி!

  அனிதா   | Last Modified : 03 Jan, 2020 05:26 pm
raid-of-bribery-department

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள காந்தி நகரில் செயல்பட்டு வரும் மின்வாரிய தலைமை அலுவலகத்தில், வேலூர் மண்டல தலைமைப் பொறியாளராக நந்தகோபால் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன.

இந்நிலையில், தலைமைப் பொறியாளர் நந்தகோபால் புத்தாண்டை முன்னிட்டு தனக்கு கீழ் நிலையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் கட்டாயப்படுத்தி நகை மற்றும் பணம் உள்ளிட்டவைகளை பரிசு பொருட்களாக பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்க ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி தேவநாதன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை காந்தி நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, அலுவலகத்தின் உள்ளே கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சாக்கன் உட்பட 7 அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். இதனால், பயந்து போன அவர்கள், பரிசுப் பொருள்களை அலுவலர்களிடமிருந்து வசூலித்து நந்தகோபாலிடம் கொடுக்க வந்திருப்பதாக ஒப்புக்கொண்டனர்.

தொடர்ந்து அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், 48 கிராம் தங்க நாணயங்கள், ரூ.1,53,000 ரொக்கப் பணம், 64 கிராம் வெள்ளி, குங்குமச் சிமிழ், பண்டல் பண்டல்களாகப் புது ஆடைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. பரிசுப் பொருள்களை லஞ்சமாக வாங்கிக் குவித்த மண்டல தலைமைப் பொறியாளர் நந்தகோபால் மற்றும் பரிசுப் பொருள்களை வசூலித்துக் கொடுக்க வந்த அதிகாரிகள் சிலரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், 100 கிலோவுக்கு மேல் ஆப்பிள்களும் குவித்துவைக்கப்பட்டிருந்தன. அது, கெட்டுப்போகக் கூடிய பொருள் என்பதால் அதைக் கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close