அதிமுக வெற்றி பெற்றதாக மாற்றி அறிவிப்பு! திமுக எம்பி யால் பணிந்து நின்ற அதிகாரி!

  அனிதா   | Last Modified : 03 Jan, 2020 05:24 pm
local-election-win-candidate-name-announcement

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் இடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பழைய தர்மபுரி ஒன்றிய கவுன்சிலில் திமுக வெற்றி என அறிவிக்கப்பட்ட சற்று நேரத்தில், அப்படியே மாற்றி அதிமுக வெற்றி என தேர்தல் அதிகாரி அறிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார், தேர்தல் அதிகாரியின் அறைக்கு சென்று தேர்தல் அதிகாரியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

அதேநேரத்தில் திமுக வெற்றி என அறிவித்தநிலையில், தபால் வாக்குகள் வித்தியாசம் காரணமாக முடிவு மாற்றி அறிவிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close