இளம்பெண்ணின் உயிரைப் பறித்த உருளைக்கிழங்கு போண்டா! அதிர்ச்சியில் உறவினர்கள்!

  சாரா   | Last Modified : 03 Jan, 2020 04:16 pm
young-women-died-after-eating-potato

சென்னை சூளைமேடு, காமராஜர் நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர், ராயப்பேட்டையில் வேலைப் பார்த்து வருகிறார். இவரின் மனைவி பத்மாவதி. இவர் தனது தாயாரைப் பார்ப்பதற்காக சூளைமேட்டில் இருந்த அம்மா வீட்டிற்குச் சென்றிருந்தார். 

மகள் வீட்டிற்கு வந்திருப்பதையடுத்து, அருகில் இருந்த கடையில் மகளுக்குப் பிடித்த உருளைக்கிழங்கு போண்டாவை பத்மாவதியின் தாய் சுகுணா வாங்கி வந்து கொடுத்துள்ளார். 

இருவரும் பேசிக் கொண்டே உருளைக்கிழங்கு போண்டாவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். திடீரென பேச்சு மூச்சில்லாமல், போண்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த பத்மாவதி கீழே சரிந்து விழுந்தார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போண்டாவில் இருந்த உருளைக்கிழங்கு தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டது. பேச்சும் வரவில்லை. உடனடியாக தண்ணீர் கொண்டு வந்து மகள் பத்மாவதிக்கு அவரது தாயார் கொடுத்துள்ளார். ஆனாலும் பத்மாவதியால் அதன் பின்னர் சரியாக மூச்சுவிட முடியவில்லை. தொடர்ந்து மூச்சுத்திணறல் அதிமானதையடுத்து உடனடியான 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

வரும் வழியிலேயே பத்மாவதி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆசையாசையாய் தாயைப் பார்க்க வந்த பெண் அநியாயமாய் உயிரை இழந்தது அந்த பகுதியினரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உருளைக் கிழங்கு போண்டாவை பத்மாவதி, பேசிக் கொண்டே சாப்பிடும் போது, அவரது மூச்சு குழாய்க்குள் உருளைக் கிழங்கு சிக்கிக் கொண்டதால் உயிரை இழந்தது தெரிய வந்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close