அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலால் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு!

  சாரா   | Last Modified : 04 Jan, 2020 10:47 pm
oil-prices-jump-4-4-after-us-kills-top-iranian-commander-petrol-rates-may-rise

ஈரான் நாட்டின் உயர்மட்ட ராணுவ தளபதியை இறந்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக்கூடும் என கூறப்படுகிறது. 

ஈராக் நாட்டின் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய எவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதி காசிம் சோலிமானி பலியாகியுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மஹாதியும் இறந்தார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலில், ஈராக்கில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரை தாக்க காசிம் சோனாலி திட்டமிட்டதால் காசிம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் நாட்டின் உயர்மட்ட ராணுவ தளபதியை இறந்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலை 4.4% உயர்ந்து  69.16 டாலராக உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக்கூடும் என கூறப்படுகிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் 85% இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 


    

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close