மணமேடையில் ஒளிபரப்பான படுக்கையறை காட்சி! பழிதீர்த்த மணமகன்! வைரலாகும் வீடியோ!

  அனிதா   | Last Modified : 04 Jan, 2020 11:20 pm
groom-plays-video-of-cheating-bride-in-bed-with-another-man-at-their-wedding

தென் கிழக்கு சீனாவில் உள்ள ஃபூஜியான் பகுதியில் கடந்த டிசம்பர் 31ம் தேதி திருமண நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூடியிருந்தபோது மணமக்கள் இருவரும் கை கோர்த்து திருமண மேடைக்கு வந்தனர். அவர்கள் இருவரும் திருமண மேடைக்கு வந்து நிற்கும் போது, பின்னால் இருந்த திரையில் திடீரென ஒரு வீடியோ திரையிடப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் அந்த வீடியோவை பார்த்த மணப்பெண் தனது கையிலிருந்த பூச்செண்டை மணமகனின் முகத்தில் வீசிவிட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

உறவினர்கள் மற்றும் மணமகளின் அதிர்ச்சிக்கு காரணமான அந்த வீடியோவில், மணப்பெண் வேறு ஒருவடன் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை மணமகனே திரையிட்டுள்ளார். 

அந்த மணமகள் அவரது சகோதரியின் கணவருடன் நெருங்கிய நட்பில் இருந்துள்ளார். இந்நிலையில் நிச்சயிக்கப்பட்ட மணமகனின் வீட்டிற்கு வந்த மணப்பெண் அங்கிருந்த படுக்கையறையில், அவரது சகோதரி கணவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இது மணமகன் அந்த அறையில் வைத்திருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அந்த பெண்ணை பழிவாங்க நினைத்துள்ளார். இதற்காகவே திருமண நாள் வரை காத்திருந்த மணமகன் அந்த வீடியோவை திருமண நிகழ்ச்சியின் போது உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார். 

மணப்பெண்ணுக்கு ஒரு வீடும், காரும் பரிசளிப்பதாக கூறிய பிறகே அவர் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாக மணமகன் கூறியுள்ளார். ஆனால், பணத்திற்காக தன்னை ஏமாற்றியதைத் தாங்கி கொள்ள முடியாத மணமகன் மேடையில் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சீனாவில் உள்ள சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close