அமெரிக்காவை மூர்க்கமாக பழி வாங்குவோம்!! ஈரான் எச்சரிக்கை!

  சாரா   | Last Modified : 03 Jan, 2020 06:05 pm
america-willbe-punished-says-iran

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானின் குத்ஸ் பிரிவு படைத்தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி மற்றும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹசீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை கமாண்டர் அபு மஹ்தி அல் முகந்தீஸ் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்திருந்தது. இதற்கிடையே, டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க கொடி படத்தை பதிவிட்டு இருந்தார். தாக்குதல் குறித்து ஈரான், பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட குழு அவசர ஆலோசனையில் ஈடுபட்டது. அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஜாரிப், அவரது ட்விட்டர் பக்கத்தில், ஐஎஸ்ஐஎஸ், அல்நுஷ்ரா, அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக போராடி வந்த சுலைமானை கொலை செய்த அமெரிக்கா, சர்வதேச பயங்கரவாதத்தை செய்துள்ளது. இது மிகத் தீவிரமான பேராபத்தை விளைவிக்கும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றத்தை அதிகரிக்கும் முட்டாள்தனமான செயல். யோசிக்காமல், நேர்மையற்ற முறையில் செய்யும் சாகசங்களுக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும். என்று பதிவிட்டுள்ளார். 

ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் ஹடாமி கூறுகையில், ஜெனரல் காசிம் சுலைமானை அநியாய படுகொலை செய்தவர்களை பழிவாங்குவோம். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பழிக்கு பழியாக நடவடிக்கை எடுப்போம் என்றார். அதே போல், கிளர்ச்சியாளர் படையின் முன்னாள் கமாண்டர் மோசின் அவரது ட்விட்டர் பக்கத்தில், சுலைமானை கொலை செய்த அமெரிக்காவுக்கு எதிராக மூர்க்கத்தனமாக பழிவாங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close