பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு! வெளியானது புது அறிவிப்பு!

  சாரா   | Last Modified : 03 Jan, 2020 06:08 pm
school-reopening-date-extended

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காரணமாக பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்ததால், தமிழக ஆசிரியர்களின் சார்பில் ஜனவரி 3ஆம் தேதிக்கு பதிலாக ஒருநாள் தள்ளி வைத்து ஜனவரி 4 திறந்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் நள்ளிரவைத் தாண்டியும் நடைப்பெற்றதால், 2020ஆம் ஆண்டின் முதல்வேலை நாளை புத்துணர்வோடு தொடங்க ஏற்ற சூழல் இருக்காது என்று கோரிக்கை வைக்கப்பட்டது.


இதற்கு ஏற்றவாறு பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், 3ஆம் தேதி திறக்கப்படும் என்று இருந்த நிலையில் 4ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close