மகனும், மகளும் தோல்வி... சோகத்தில் மூழ்கிய அதிமுக மூத்த தலைவர்...

  அனிதா   | Last Modified : 03 Jan, 2020 06:33 pm
son-and-daughter-failed-in-election

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான அன்வர் ராஜாவின் மகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த நிலையில் தற்போது அவரது மகனும் தோல்வி அடைந்த செய்தி தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., வக்பு வாரியத் தலைவர் என சகல பதவிகளையும் வகித்தவர் அன்வர் ராஜா. இவரது மகள் ராவியத்துல் அதபியா, ராமநாதபுரம் மண்டபம் ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்காக அன்வர்ராஜா தீவிர பிரச்சாரம் செய்தும் ராவியத்துல் அதபியா தோல்வியடைந்தது மட்டுமின்றி டெபாசிட்டும் இழந்தார்.

இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் சுப்புலெட்சுமி 1,343 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான 4,505 வாக்குகளில் ராவியத்துல் அதபியா 1,062 வாக்குகளும், சுப்புலெட்சுமி 2,405 வாக்குகளும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மகள் டெபாசிட் இழந்த சோகத்தில் இருக்கும் அன்வர் ராஜாவுக்கு தற்போது அவரது மகன் நாசர் அலியும் தோல்வி அடைந்த செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாசர் அலி மண்டபம் ஒன்றிய உறுப்பினர் 6-வது வார்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். முன்னாள் அதிமுக அமைச்சரின் மகள், மகன் இருவரும் தோல்வி அடைந்துள்ளது அவருக்கு மட்டுமின்றி அதிமுகவுக்கும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதனிடையே அன்வர் ராஜாவின் ஆதரவாளர்கள், பிட் நோட்டீஸ்களில் மோடியின் போட்டோவை போட்டு.. அதை தனது ஆதரவாளர்கள் மூலம் வாக்காளர்களிடம் அதிமுகவை சேர்ந்த மணிகண்டன் தரப்பினர் விநியோகித்ததாகவும் இதுவே அன்வர்ராஜா மகன், மகள் தோல்விக்கு முழுக்க முழுக்க காரணம் எனவும் குற்றம் சாட்டுகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close