ஆசீர்வதிப்பது போன்று நடித்து மாணவியிடம் பணம் பறிப்பு!

  அனிதா   | Last Modified : 03 Jan, 2020 09:04 pm
robbery-in-chennai

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி சி.ஏ. படித்து வருபவர் இலக்கியா(20). இவர் அப்பகுதியில் நடந்து சென்றபோது திருநங்கைகள் 5 பேர் ஆசீர்வாதம் செய்வது போல அருகில் வந்துள்ளனர். கண்ணிமைக்கும் நொடியில் இலக்கியாவின் கைபையை பிடுங்கி விட்டு ஓடிய திருநங்கைகள் அதில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை எடுத்துவிட்டு பையை வீசி எறிந்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். 

இது குறித்து இலக்கியா அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய திருநங்கைகளை தேடி வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தில் திருநங்கை இது போன்ற நூதன வழிப்பறியில் ஈடுபடுவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close