மழையில் ரிக்‌ஷா ஓட்டுநர் செய்த செயல்! குவியும் பாராட்டுக்கள்!

  அனிதா   | Last Modified : 04 Jan, 2020 01:00 pm
acclaim-for-rickshaw-man-action

சமூக வலைதளங்களில் அவ்வபோது மனித நேயத்தை பிரதிபலிக்கும் பல உண்மை சம்பவங்கள் வைரலாகி வருகிறது. இது பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பலரை உற்சாகப்படுத்துகிறது. அந்த வகையில் டெல்லியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் மனிதம் உயிர்புடன் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. 

ஹயாத் என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அந்த படத்தை ஷூம் செய்து பார்த்துவிட்டு பின்னர் நன்றி கூறவும் எனவும் பதிவிட்டிருந்தார். அந்த படத்தில் ஒரு ரிக்ஷா சென்று கொண்டிருக்கிறது. அந்த ரிக்ஷாவில் இருப்பது ஒரு நாய். வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருவதால், மனிதர்கள் முதல் மிருகங்கள் வரை மிகுந்த அவதியடைகின்றனர். 

இந்நிலையில், ஒரு ரிக்ஷா ஓட்டுநர் குளிரில் நடுங்கிய நாயை போர்வையால் பொதிந்து ரிக்ஷாவில் வைத்து அழைத்து செல்லும் காட்சி அனைவரின் இதயத்தையும் கரைய வைத்துள்ளது. இதற்கு கமெண்ட்ஸ், லைக்கும் குவிந்து வருகிறது. 

 

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close