பிரபல சின்னத்திரை நடிகைக்கு நடந்த திடீர் திருமணம்!

  அனிதா   | Last Modified : 04 Jan, 2020 03:31 pm
marriage-to-a-kalyana-parisu-actress

மெட்டி ஒலி என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரித்திகா ஸ்ரீ. இதை தொடர்ந்து நாதஸ்வரம் தொடரின் மூலம் நாயகியாக வலம் வந்த இவர் மக்கள் மனதில் மலர் ஆக பிரபலமானார்.

இதனை அடுத்து கலசம், குலதெய்வம், கல்யாண பரிசு உள்ளிட்ட தொடர்களில் நடித்து, சின்னத்திரை நடிகைகளில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். அதோடு சீரியல் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். அதுமட்டுமின்றி வெண்ணிலா கபடி குழு, வேங்கை, மகேஷ் சரண்யா மற்றும் பலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவரது திருமணம் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இவர் சனீஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற இந்த திருமண விழாவின் புகைப்படங்களும்,வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close