நடு ரோட்டில் டாக்ஸிக்கு பணம் இல்லாமல் தவித்த பாடகி!

  அனிதா   | Last Modified : 04 Jan, 2020 01:00 pm
the-singer-with-no-money

செர்பிய நாட்டைச் சேர்ந்த அனஸ்தாசிஜா ரஸ்னாடோவிக் என்ற பிரபல பாடகி தனது தோழியுடன் பாரிஸ் சென்றுள்ளார். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கிய பாடகி வெளியே சென்ற போது, அவரது கைபையை பிக்பாக்கெட் அடித்துள்ளனர். இதனால், ஹோட்டலுக்கு திரும்ப வழியில்லாத இளம்பெண் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார். 

பின்னர், டாக்சி டிரைவர் ஒருவரிடம் தான் ஒரு பாப் இசை பாடகி என்றும், தனது  பர்சை பிக்பாக்கெட் அடித்து சென்று விட்டதாகவும் கூறி தன்னை ஹோட்டலில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார்.

மேலும், ஹோட்டலில் சென்றதும் பணத்தை எடுத்து தருவதாக கூறியுள்ளார். இதனை ஒப்புக் கொண்ட டாக்ஸி ஓட்டுநர், பாடகியை ஹோட்டலில் இறக்கி விட்டுள்ளார். பின்பு அந்த பாடகி பணத்தை எடுத்து வந்து கொடுத்த நிலையில் டாக்ஸி ஓட்டுநர் பணத்தை வாங்க மறுத்துள்ளார். பிரபல இசைப் பாடகி இப்படி பணம் இல்லாமல் தவித்து வருவது தனக்கு சங்கடமாக இருப்பதாகவும், அதனால் தான் பணம் பெற விரும்பவில்லை என்றும் அந்த டாக்ஸி ஓட்டுநர் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close