முதலமைச்சரை இழிவுப்படுத்தும் வகையில் முகநூல் பதிவு.. முக்கிய பிரமுகர் கைது..

  அனிதா   | Last Modified : 03 Jan, 2020 10:49 pm
face-book-post-to-discredit-the-chief-minister

நெல்லை கண்ணனின் கைதை கண்டித்து முதலமைச்சரை இழிவுப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவிட்ட, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த சிராஜ்தீனை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தினை கண்டித்து இஸ்லாமிய அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்டு பேசிய மேடை பேச்சாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். இவரது கைதை கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த சிராஜ்தீன் என்பவர் முதலமைச்சரை இழிவுப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த சிராஜ்தீன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close