சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த உறவினர்! தொடரும் கொடுமைகள்!

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 12:59 pm
4-year-old-abducted-raped-police

தெலங்கானாவின் ஜெயசங்கர் பூபால்பல்லி மாவட்டத்தில் தனது தாய் மற்றும் பாட்டியுடன் 4 வயதான சிறுமி வசித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவரது உறவினர் ஒருவர் தூக்கிச்சென்று, அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அடுத்த நாள் எழுந்து பார்த்தபோது குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்த தாய், காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். அதனை அடுத்து, தாயுடன் சென்று அக்கம்பக்கத்தில் தேடிய போலீசார், பருத்தித் தோட்டத்தில் இருந்து குழந்தையை மீட்டுள்ளனர். இரவு முழுவதும் அங்கேயே சிறுமி தவித்துள்ளது. அப்போது தனக்கு ஏற்பட்டதை தன் தாயிடம் அழுதுக்கொண்டே கூறிய குழந்தையை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த அவரது உறவினரை தேடி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close