OLX-ல் விளம்பரம்.. ராணுவ அதிகாரி எனக் கூறி அரங்கேற்றப்பட்ட மோசடி.. இளைஞர்கள் பரிதாபம்

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 07:11 am
fradulent-man-cheats-people-name-military

ஆன் லைன் விற்பனை இணைய தளமான OLX ல் பிரமிள் குமார் என்பவர் விளம்பரம் ஒன்று செய்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவப் பிரிவில் வேலை பார்ப்பதாகவும் தற்போது பணியிட மாறுதல் ஆகி வேறு மாநிலத்திற்கு செல்ல இருப்பதால் தான் பயன்படுத்திய ராணுவ இருசக்கர வாகனத்தை விற்க இருப்பதாகவும் அந்த விளம்பரத்தில் கூறியுள்ளார். சென்னை  சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் அந்த விளம்பரத்தை பார்த்து பிரமிள்குமாரை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களைக் கேட்டுள்ளார். அப்போது ராணுவத்தில் தான் வேலை பார்க்கிறேன் என்பதை உறுதி செய்யும் வகையில் ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மளிகை பொருள்களுக்கான அடையாள அட்டை, மதுபானம் வழங்குவதற்கான அடையாள அட்டை, மற்றும் ராணுவ சீருடையுடன் கையில் ஏ.கே. 47 துப்பாக்கி ஏந்தி நிற்பது போன்ற பல புகைப்படங்களை பிரமிள்குமார்  வாட்ஸ் ஆப் மூலம் பாலமுருகனுக்கு அனுப்பியுள்ளார்.

இதனை நம்பிய பாலமுருகன், ராணுவ இரு சக்கர வாகனத்தை வாங்குவதற்கு முதல் தவணை தொகையாக 5000 ரூபாயை பிரமிள்குமாரின் கூகுள் பே கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இதன் பின்னர் மறுநாள் காலையில் எழுந்து தன்னுடைய செல்போனை பார்த்த பாலமுருகன் அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது கூகுள் பே கணக்கில் இருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாலமுருகன் தன்னுடைய பணம் யாருடைய வங்கிக் கணக்கிற்கு சென்றது என்பதை நண்பர் ஒருவரின் செல்போன் மூலம் கண்டுபிடிக்க முயன்றுள்ளார்.

அப்போது, தனக்கு அனுப்பிய அடையாள அட்டைகளை நண்பரின் செல்போன் எண்களுக்கும் அனுப்பியிருந்ததைப் பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்தார். ராணுவ வீரர் என்ற பெயரில் பிரமிள் குமார் என்பவர் மோசடியை அரங்கேற்றியது தெரிய வந்தது. தன்னைப் போலவே எட்டுக்கும் மேற்பட்டோரை பிரமிள்குமார் ஏமாற்றிய அதிர்ச்சித் தகவலும் பாலமுருகனுக்கு தெரிந்தது. இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் புகார் அளித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close