அடகு கடையை உடைத்து ரூ. 2.5 கோடி அபேஸ்.. சிசிடிவி கேமரா இருக்கு ஆனா காட்சிகள் இல்லை...!

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 07:56 am
jewelry-pawn-shop-mysterious-persons-robbing-gold

புதுச்சேரி திலாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் ஜெயின். இவர் அதே பகுதியில் நகை அடகு வைக்கும் கடை நடத்தி வருகின்றார். வழக்கம்போல் இரவில் வேலை நேரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் காலை கடைக்கு வந்த ராஜேஷ்குமார் கடையின் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி, கடையிலிருந்த லாக்கர்கள் உடைக்கப்பட்டு தங்கம், வெள்ளி நகைகளை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராஜேஷ்குமார் ஜெயின் கோரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் கை ரேகை நிபுணர்கள் உதவியுடன், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருடர்கள் அதிகாலை நேரத்தில் ராஜேஷ்குமாரின் கடைக்கு வந்துள்ளனர். பின்னர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், லாக்கரில் இருந்து கிடைத்ததை அள்ளினர். மேலும் போலீசில் சிக்காமல் இருக்க வேண்டும் என யோசித்த கொள்ளையர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் தூக்கிச் சென்றுள்ளனர். திருடர்கள் கடையின் பூட்டை உடைத்தது மட்டுமல்லாமல், தங்களது வேலையை கச்சிதமாக முடித்தவுடன் பூட்டை மீண்டும் பூட்டிச்சென்றுள்ளனர். இதனிடையே இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் திருடப்பட்டுள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close