100 ரூபாய், குவார்டர்.. இளைஞரைக் கொடூரமாக தாக்கிய சோகம்!

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 12:58 pm
attack-on-youth-in-kerala

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 31ஆம் தேதி செந்தில் என்பவர் வேலைக்கு சென்று விட்டு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது புத்தாண்டையொட்டி பிரதீப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதே வழயில் சென்ற செந்திலை பிரதீப் வழிமறித்து 100 ரூபாய் பணம் கேட்டார். செந்தில் மறுக்கவே அங்கிருந்த பிரதீப்பின் ஆதரவாளர்கள் அவரை கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த செந்தில் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்க பட்டார். பிரதீப் இதுபோல பல பேரிடம் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக புகார் உள்ளது .செந்தில் கொடுத்த புகாரின் பேரில் பிரதீப் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். பிரதீப் கேரளாவில் ஆளும் கட்சியின் பிரமுகராக இருப்பதாகவும் இதனால் அவர் வழக்கை திரும்பபெற குடும்பத்தினரை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close