சாதி வேறு என்பதால் பெற்றோர் எதிர்ப்பு.. காதல் ஜோடிகள் எடுத்த விபரீத முடிவு 

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 09:57 am
lovers-sucide-in-virudhunagar

விருதுநகர் அருகேயுள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர் பட்டதாரி சரவணன். அங்குள்ள ரோசல்பட்டியை சேர்ந்த ரஞ்சிதா என்பவரும் சரவணனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பிரிந்து வாழ முடியாது தற்கொலை செய்து கொள்ள காதல் ஜோடி  முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும் விருதுநகர்-சாத்தூர் ரயில்பாதை பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த ரயில்முன் பாய்ந்து 2 பேரும் தற்கொலை செய்துக்கொண்டனர். அக்கம்பக்கத்தினர் அவர்களது உடலை கண்டு அளித்த தகவல் அடிப்படையில், இருவரின் உடல்களை காவல்துறையினர் மீட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்துள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close