14 லட்சம் ரூபாயை குப்பைத் தொட்டியில் வீசிய இளம் தம்பதி!

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 12:56 pm
couple-unknowingly-threw-money-inside-dustbin

இங்கிலாந்தை சேர்ந்த இளம் தம்பதியினர், 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தை குப்பையில் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இங்கிலாந்தின் சோமர்செட் பகுதியில் இளம் தம்பதியர் வசித்து வருகின்றனர். அவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு மூட்டை ஒன்றை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். வழக்கம்போல் அதனை எடுத்துச்சென்ற துப்புரவு தொழிலாளர்கள், மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பியுள்ளனர். அங்கு ஊழியர்கள் அதனை பிரித்து பார்த்தப்போது அதிர்ச்சியடைந்தனர். அந்த மூட்டையில் 15 ஆயிரம் பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் 14 லட்சம் ரூபாய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர்  பணியாளர்கள், அது குறித்து காவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து, அந்த மூட்டை எங்கிருந்து எடுத்துவரப்பட்டது என்பதை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கண்டறிந்த காவலர்கள், தொடர்புடைய தம்பதியினரிடம் பணத்தை ஒப்படைத்துள்ளனர். தங்களது உறவினர் ஒருவர் பல இடங்களில் பணத்தை மறைத்து வைத்ததாகவும், அவர் இறந்த பின்னர் அவரது உடைமைகளை குப்பையில் போட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், இவ்வளவு பணத்தை அவர் மறைத்து வைத்திருப்பார் என எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close