கடத்தப்பட்ட சீக்கிய அதிகாரி மகள் மதமாற்றம்? குருத்வாராவை குறிவைக்கும் பாகிஸ்தான்!?

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 12:55 pm
anti-sikh-slogans-outside-gurdwara-in-pakistan-s-punjab

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நங்கனா சாஹிப் என்ற இடத்தில்தான் சீக்கிய மதத் தலைவர் குருநானக் பிறந்ததாகக் கூறப்படுகிறது. குருநானக்கின் நினைவாகவே அந்த இடம் நங்கனா சாஹிப் என அழைக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள குருத்வாரா, சீக்கியர்களின் புனிதத்தலமாக விளங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் இங்கு வருகை தந்து வழிபாடு நடத்திச் செல்கின்றனர். ஆண்டுதோறும் குருநானக்கின் பிறந்தநாளில் மொத்த நங்கனா சாஹிப் நகரமும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இது பாகிஸ்தானின் லாகூர் நகரிலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையில், சீக்கியர்களின் குருத்வாரா மீது நேற்று பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியக் கும்பல் ஒன்று கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. 

நங்கனா சாஹிப்பில் உள்ள குருத்வாராவில் பணியாற்றும் ஓர் அதிகாரியின் மகளை, அப்பகுதியைச் சேர்ந்த முகமது ஹசன் என்ற இஸ்லாமிய இளைஞர் கடத்தி வலுக்கட்டாயமாக மதம் மாற்றி அவரை திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண்ணின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்தாகவும் அதற்காக ஹசனை பாகிஸ்தான் காவலர்கள் கடுமையாகத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பிரச்னையால் ஹசனின் அண்ணன் முகமது இம்ரான் தலைமையில் ஒரு கும்பல் நேற்று குருத்வாராவுக்கு வந்து கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

அவர்கள் குருத்வாராவை முற்றுகையிட்டு சீக்கியர்களுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். சீக்கியர்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் வகையில் ஹசனின் அண்ணன் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இம்ரானின் பேச்சால் லாகூர் மற்றும் பஞ்சாப் மாகாணம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு குருத்வாராவில் சிக்கியுள்ள சீக்கியர்களையும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த குருத்துவாராவையும் பாதுகாக்க வேண்டும் எனப் பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானில் நடந்துள்ள இந்தச் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குருத்வாரா பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. குருத்வாரா மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை, அது பாதுகாப்பாக உள்ளது' என்றும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close