அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்கப் போறீங்களா?! சுற்றுலா துறையின் புது ஏற்பாடு! 

  சாரா   | Last Modified : 05 Jan, 2020 06:53 am
jallikattu-trip

தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டங்களின் போது நடைப்பெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது. இந்த தை மாதப் பிறப்பிற்காக உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் காத்திருந்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்ப்பதற்காக வந்து குவிவார்கள். 

இந்த வருடம் முதல் முறையாக தமிழக சுற்றுலாத்துறையும் களத்தில் இறங்கியிருக்கிறது. பொங்கல் விடுமுறையில், மூன்று நாட்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை எல்லோரும் கண்டு களிக்கும் விதமாக புதிதாக  சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சுற்றுலாவிற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.4,300ம், சிறியவர்களுக்கு ரூ.3,450 கட்டணங்களாக நிர்ணயித்திருக்கிறது. 

இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று இரவு 9 மணிக்கு சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து மதுரைக்கு சென்று அங்கிருந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டை காண்பதற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சொகுசு பேருந்து 16ம்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 5.30 மணிக்கு மதுரை சென்றடைந்து, காலை உணவு மதுரையிலும், அதன் பின்னர் 17ம்தேதி காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் சென்றடைந்து, காளைகளின் வீர விளையாட்டை பார்வையிடுமாறு ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்டு களித்து விட்டு அன்றைய இரவு மதுரையில் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அடுத்த நாள் காணும் பொங்கல் அன்று காலையில் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம், அழகர் கோவில் ஆகிய இடங்களுக்கு வழிகாட்டி உதவியுடன் அழைத்து செல்லப்பட்டு, இரவு 10 மணிக்கு புறப்பட்டு 19-ந்தேதி விடியற்காலை சென்னை வந்தடைவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close