சபரிமலையில் மகரஜோதிக்காக தங்க  திருவாபரணங்கள் 13 ம் தேதி ஊர்வலம்!

  சாரா   | Last Modified : 04 Jan, 2020 06:02 pm
magara-jothi-on-jan15th-in-sabaramala

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் வருகிற 13-ம் தேதி ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 15ம் தேதி நடக்கிறது.

மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் வருகிற 13-ஆம் தேதி சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படும் ஊர்வலம் 15ம் தேதி மதியம் பம்பை சென்றடையும்.

அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும், மேலும் ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நிறைவடைந்த பின் இரவு 7 மணிக்கு பிறகு பக்தர்கள் படியேற அனு மதிக்கப்படுவார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close