மறந்துடாதீங்க!! நாளை சிறப்பு முகாம்! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு! 

  சாரா   | Last Modified : 04 Jan, 2020 06:20 pm
special-counters-to-add-names-in-voter-s-list

கடந்த வாரம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில் 6 கோடியே 1329 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார்கள். இந்தப் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்புபவர்களுக்காக தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்களை தேர்தல் ஆணையம்  அமைத்துள்ளது.

இந்த முகாமில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், பிழைத் திருத்தம் செய்தல் என அனைத்து விதமான திருத்தங்களையும் ஒரே இடத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று அடுத்து வரும் பிப்ரவரி மாதம் 11,12 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 14ல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close