போதையில் தனக்குத் தானே கழுத்தை அறுத்துக் கொண்ட பரிதாபம்! 

  சாரா   | Last Modified : 04 Jan, 2020 06:35 pm
sucide-attempt-in-drug-addiction

ஆம்பூர், சான்றோர் குப்பத்தை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மகன் நதி வாணன்(26). இவர் ஆம்பூர் பகுதியில்  கூலி வேலை செய்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட நதி வாணன், சரிவர வேலைக்கும் செல்லாமல் போதையில் சுற்றி வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்றிரவு போதையில் தள்ளாடியபடியே வீட்டிற்கு வந்த நதி வாணன்,  அங்கிருந்த காலி மது பாட்டிலை உடைத்து, என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே தனக்கு தானே அவருடைய கழுத்தை அறுத்துக் கொண்டார். அதன் பிறகு வலியால் துடித்து அலற ஆரம்பித்தார்.

மகனின் அலறல் சத்தம் கேட்டு, பெற்றோரும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் உடனடியாக ஓடி சென்றுப் பார்த்தனர். அதன் பிறகு நதி வாணனை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் மது பழக்கத்தில் தனக்குத் தானே கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து ஆம்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close