ஏன் பெண்கள் அணியும் சட்டையில் மட்டும் பட்டன் இடது பக்கம் உள்ளது?

  சாரா   | Last Modified : 04 Jan, 2020 09:06 pm
why-button-for-mens-and-womens-differ

இப்போ நீங்க சட்டை போட்டு இருந்தா உடனே பாருங்க உங்க பட்டன் எந்த பக்கம் இருக்குனு.. நீங்க ஆணா இருந்தா வலது பக்கமும், பெண்ணா இருந்தா இடது பக்கமும் இருக்குமே? ஏன், இதுக்கு பின்னால என்ன காரணம் இருக்குனு பார்க்கலாமா?

* பொதுவாகவே பெண்கள் அழகில், அலங்காரகளில் அக்கறை கொண்டவர்கள், இது இந்த நவீன காலத்திற்கு மட்டுமல்ல, பண்டைய காலத்திற்கும் இது பொருந்தும். அக்கால பணக்கார பெண்களுக்கு ஆடை அலங்காரம் செய்யவே தனியாக வேலையாட்கள் இருந்துள்ளனர். பொதுவாக இந்தப் பணிப்பெண்கள் அனைவரும் வலது கைப் பழக்கம் உடையவர்கள். சட்டை மாட்டி விடும்போது, வலது பக்கம் பட்டன் இருந்தால் இவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதால், வலது கை பக்கம் பெண்கள் சட்டையில் பட்டன் வைக்கும் பழக்கம் ஏற்பட்டது. மேலும் 1830 - 1900களில் இருந்த ராணிகள் தாங்கள் தனித்து தெரிவதற்காக இவ்வாறு வடிவமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்போ தெரிஞ்சிகிட்டீங்களா நம்ம சட்ட பட்டோனோட சரித்திரத்த!!

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close