1 சீட் ஜெயிச்சாலும் சீமான் எடுத்த தில்லான முடிவு!

  முத்து   | Last Modified : 05 Jan, 2020 03:31 pm
seeman-will-defeat-one-councilor

நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழு கூட்டம் சென்னை வேலப்பன் சாவடியில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார். 

பொதுக்குழு கூட்டத்தின்போது, குடியுரிமைச் சட்டத்திருத்தத்தையும், முத்தலாக் மசோதாவையும், தேசியப் புலனாய்வு முகாமையையும்  உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், மத்திய அரசின் எதேச்சதிகாரப்போக்கும், தவறானப் பொருளாதார முடிவுகளும் தொடர்ந்தால் அது நாட்டைப் படுகுழியில் தள்ளிவிடும். ஆகவே, பொருளாதார நிபுணர்களை அழைத்து ஆலோசித்து நாட்டைத் தற்காத்துக் கொள்வதற்குரிய முன்னேற்பாடுகளைப் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு விரைந்து செய்ய வேண்டும், தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையிலே நடத்த வேண்டும்  என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
இதன்பின்னர் செய்தியாளர்கல்ளிடம் பேசிய சீமான், ஊரக உள்ளாட்சி தேர்தலில் 10 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. இதனால் இந்த தேர்தல் எங்களுக்கு பின்னடைவு அல்ல, எங்களுக்கு உற்சாகத்தை அளித்ததாக கூறினார். அடுத்த ஆண்டு வரவுள்ள பேரவை தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் சொந்த தொகுதியில் அவர்கள் ஒன்றரை ஆண்டுகள் களப்பணியில் ஈடுபடுவார்கள் என சீமான் தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close