மாணவியை ஆபாச படத்தில் நடிக்க வைத்ததற்காக 91 கோடி இழப்பீடு! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

  முத்து   | Last Modified : 05 Jan, 2020 03:04 pm
california-modeling-agencies-case

மாடலிங் என்று கூறி தங்களை ஆபாசப்படத்தில் நடிக்க வைத்ததாக மாணவிகள் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்ட ஆபாச இணையதளம் 91 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாடலிங் ஆக வேண்டும் என்பது இன்றைய கால இளம்பெண்களில் ஏராளமானோரின் கனவாக உள்ளது. இதற்காக பல நிறுவனங்கள் இணையதளம் மூலம் உதவியும் செய்து வருகிறது. அப்படி மாணவிகளை மாடலிங் செய்வதாக கூறி ஆபாச படத்தில் நடிக்க வைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட 22 மாணவிகள் இது தொடர்பாக கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அப்போது, தங்களை மாடலிங் செய்வதற்காக அழைத்துச் சென்று போதை மருந்து கொடுத்து ஆபாசப்படத்தில் நடிக்க வற்புறுத்தப்பட்டதாக மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு குறிப்பிட்ட ஆபாச இணையதளம் இந்திய மதிப்பில் 91 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close