“காசு வாங்கிய நாயே.. ஓட்டு போட்டியா” நன்றி தெரிவித்து வேட்பாளர் ஒட்டிய போஸ்டர்..!

  முத்து   | Last Modified : 05 Jan, 2020 11:12 am
local-body-election-candidate-stick-poster-against-voters

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகின. வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டுவது வழக்கம். ஆனால், தோல்வி அடைந்த வேட்பாளர் ஒருவர் வீதிவீதியாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழப்பனையூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு பெற முயன்ற வேட்பாளர் ஒருவர் தோல்வி அடைந்ததால் பணம் வாங்கியவர்களை திட்டி போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காசு வாங்கிய நாயே ஓட்டு போட்டியா” என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை, பெயர் குறிப்பிடாத வேட்பாளர் ஒருவர் ஒட்டியுள்ளார்.  ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் குற்றமாகும். ஆனால் வாக்காளர்கள் கொடுத்த பணத்திற்கு ஓட்டுப்போடவில்லை என்று வேட்பாளர் ஒருவர் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close